பன்றிக் காய்ச்சல் (Swine flu)
விக்கிபீடியாவில் இருந்துபன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்.
இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்
உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.
மருந்து
இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நோய் தடுப்பு முறை
நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொள்ளை நோய்
ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment